இந்திய பொருளாதார வளர்ச்சி 4.9 சதவீதமாக குறைத்து Fitch நிறுவனம் மதிப்பீடு

0 661

நடப்பாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 4.9 சதவிகிதமாக குறைத்து ஃபிட்ச் சொலியூசன் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

2019-20 ஆம் ஆண்டு இந்திய பொருளாதாரம் 5.1 சதவிகிதம் இருக்கும் என ஃபிட்ச் நிறுவனம் ஏற்கனவே மதிப்பிட்டுருந்தது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக, பொருள்களுக்கான விநியோக சங்கிலி பாதிப்படைந்து வருவதாகவும், தயாரிப்பு துறையில், உள்நாட்டு உற்பத்திக்கான தேவைகள் குறைந்து வருவதாலும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. எனவே இதன் காரணமாக, நடப்பாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 4.9 சதவிகிதம் இருக்கும் என ஃபிட்ச் சொலியூசன் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

மேலும் வரும் நிதியாண்டு 2020-21 ன் வளர்ச்சி மதிப்பீடும் 5.9 சதவிகிதத்தில் இருந்து 5.4 சதவிகிதமாக குறைந்து மதிப்பிட்டுள்ளது. கரோனோ வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பின் அடிப்படையில், பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments