சென்னை துறைமுகத்தில் உள்ள சீன பூனையை விடுவிக்க PETA கோரிக்கை
சீனாவில் இருந்து வந்த சரக்குக் கப்பலில் இருந்து பிடிபட்ட பூனைக்கு கொரானா தொற்று இருக்கிறதா என துறைமுக அதிகாரிகள் கண்காணித்து வரும் நிலையில் அதை விடுதலை செய்ய வேண்டும் என பீட்டா (PETA) அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
20 நாட்களுக்கு மேலாக சென்னை துறைமுகத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ள இந்த பூனையை சீனாவுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதுவரை பூனை உயிரோடு இருக்காது என்று கூறியுள்ள பீட்டா அமைப்பினர், பூனைகளுக்கு கொரானா பரவும் என்ற தவறான நம்பிக்கையால், அதை தனியிடத்தில் வைத்திருப்பதாக கூறியுள்ளனர்.
சீனாவில் இருந்து சென்னை வரை கப்பல் கண்டெய்னர் ஒன்றில் உணவோ, நீரோ இன்றி வந்த இந்த பூனை கொரானா வைரசை கொண்டு வராது என்பது தெரியாமல் அதை இப்படியே வைத்திருந்தால், இந்த அப்பாவி ஜீவன் உயிரை விட்டு விடும் என்றும் பீட்டா கவலை தெரிவித்துள்ளது.
Comments