ஒலிம்பிக்கை ஒத்தி வைக்க ஒப்பந்தம் அனுமதிக்கிறது : ஒலிம்பிக் விளையாட்டு துறை
ஒலிம்பிக் போட்டியை இந்த ஆண்டு இறுதி வரை ஒத்திவைக்க தங்களுக்கு வாய்ப்புகள் இருப்பதாக ஜப்பான் ஒலிம்பிக் விளையாட்டு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் கொரானா வைரஸை கட்டுப்படுத்தாவிட்டால், ஜூலை 24ம் தேதி முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்வது குறித்து பரிசீலிப்போம் என சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு எச்சரித்திருந்தது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பேசிய ஜப்பான் ஒலிம்பிக் விளையாட்டு அமைச்சர் செய்கோ ஹசிமோடோ (Seiko Hashimoto) சர்வதேச ஒலிம்பிக் அமைப்புடனான ஒப்பந்தத்தில், 2020க்குள் போட்டியை நடத்த வேண்டும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறினார். அதேநேரத்தில் ஒலிம்பிக்கை திட்டமிட்டபடி நடத்த உறுதிபூண்டு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments