தமிழக கோவில்களை மத்திய தொல்லியல்துறை கையகப்படுத்தக் கூடாது - ராமதாஸ் வேண்டுகோள்
தமிழக கோவில்களை கையகப்படுத்தும் திட்டம் மத்திய தொல்லியல் துறையிடம் இருந்தால் அதைக் கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதுமுள்ள பழையான கோவில்களை மத்திய தொல்லியல் துறை நிர்வாகத்திற்கு மாற்ற மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக கோவில்கள் ஒப்பீட்டளவில் அறநிலையத்துறையால் சிறப்பாகவே பராமரிக்கப்பட்டு வருவதாகவும் எதற்காக இப்படி ஒரு அறிவிப்பை மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் வெளியிட்டார் என்று தெரியவில்லை என்றும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உயிரோடும் உணர்வோடும் இருக்கும் கோவில்கள் மத்திய தொல்லியல் துறை வசம் சென்றால் உயிரும் உணர்வும் அற்ற புராதனச் சின்னங்களாக மாறும் என்றும் ராமதாஸ் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Comments