புல்வாமா தாக்குதல் சம்பவம்: தந்தை, மகளை கைது செய்தது என்ஐஏ

0 1466

புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக தந்தை, மகள் ஆகிய மேலும் 2 பேரை தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் புல்வாமாவில் கடந்த ஆண்டு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி ஒருவன் நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர்.

இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி அடில் அகமது தருக்கு அடைக்கலம் கொடுத்த ஷாகீர் பசீர் மேக்ரே (Shakir Bashir Magrey) என்பவனை கடந்த 28ம் தேதி கைது செய்தனர்.

விசாரணையில் அவன் அளித்த தகவலின்பேரில், பயங்கரவாதிக்கு உதவிய லேத்போராவை சேர்ந்த தந்தை, மகள் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரின் பெயர் தாரிக் அகமது ஷா, இன்சா தாரிக் ((Tariq Ahmad Shah and Insha Tariq) என தெரிவித்துள்ள தேசிய புலனாய்வு அமைப்பினர், வேறு கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments