கோலி தனது கண் பார்வைத் திறனை மேம்படுத்த வேண்டும் - கபில்தேவ்

0 2665

நியூசிலாந்து தொடரில் சொதப்பிய விராட் கோலி தனது கண் பார்வைத் திறனை மேம்படுத்திக்கொள்ளவேண்டும் என இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில் தேவ்  அறிவுறுத்தியுள்ளார்.

வழக்கமாக சிறப்பாக விளையாடும் கோலி, நியூசிலாந்து எதிரான இரு டெஸ்ட் போட்டிகளிலும் பெரிதளவில் ரன்  சேர்க்க முடியாமல் விரைவிலேயே அவுட் ஆனார்.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கபில்தேவ், களத்தில், இன்ஸ்விங் பந்துகளை லாவகமாக பவுண்டரிகளுக்கு விரட்டும் கோலி, இத்தொடரில் அத்தகைய பந்துகளில் அவுட் ஆனதாக சுட்டிக் காட்டினார்.

பொதுவாக 30 வயதை தாண்டினால் ஏற்படும் கண் பார்வை திறன் பிரச்சினை கோலிக்கும் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்த அவர்,அத்தகைய பிரச்சினைகளை களைய, அவர் கூடுதல் பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments