மானசரோவர், முக்திநாத் யாத்திரை சென்ற இந்து சமய யாத்ரீகர்களுக்கு மானியம்

0 1376

2019-2020ம் ஆண்டில் மானசரோவர், முக்திநாத் யாத்திரை சென்றவர்கள் ஏப்ரல் 30ந் தேதிக்குள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று இந்துசமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 2019 ஏப்ரல் 1 முதல் இம்மாதம் 31 வரை (01.04.2019 முதல் 31.03.2020 முடிய) புனித யாத்திரை முடித்த தமிழ்நாட்டை சேர்ந்த இந்து சமய யாத்ரீகர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

தகுதி வாய்ந்த மானசரோவர் யாத்ரீகர்கள் 500 பேருக்கு மட்டும் தலா 40,000 ரூபாயும், முக்திநாத் யாத்ரீகர்கள் 500 பேருக்கு தலா 10,000 ரூபாயும் மானியமாக வழங்கப்படும் என்றும், அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவினரால் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஒவ்வொரு யாத்திரைக்கும் தகுதி வாய்ந்த தலா 500 பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments