டெல்லி வன்முறை : தொலைபேசியில் பொய்யான தகவல்கள் பரப்பிய 50 பேர் கைது
வன்முறை ஏற்பட்டதாகப் பொய் கூறி ஞாயிறன்று ஆயிரத்து எண்ணூறு அழைப்புகள் வந்ததாகவும், இது தொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
டெல்லி வன்முறை தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களைப் பரப்புபவர்களை இணையத்தளக் குற்றப்பிரிவினர் கண்டறிந்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். தகாத நிகழ்வுகள் குறித்துத் தகவல் தெரிவிக்கவும், உதவி கோரவும் காவல் கட்டுப்பாட்டு அறைத் தொலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஞாயிறன்று இந்தக் கட்டுப்பாட்டு அறைகளுக்கு மொத்தம் ஆயிரத்து 880 அழைப்புகள் வந்த நிலையில், அவர்கள் தெரிவித்த தகவல்களைச் சரிபார்த்தபோது பொய்யானவை எனத் தெரியவந்துள்ளது. இத்தகைய வதந்திகளைப் பரப்பியோர் மீது பத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மாநகரக் காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
Comments