அமளியால் இரு அவைகளும் ஒத்தி வைப்பு

0 1663

டெல்லி வன்முறைக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து அமித் ஷா விலக வேண்டும் எனக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.

டெல்லி வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன. இதனால் அமளி ஏற்பட்டதால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டன.

பிற்பகலில் மக்களவை கூடியபோது, டெல்லி வன்முறை குறித்து ஹோலிக்குப் பிறகு விவாதம் நடத்த அரசு தயாராக இருப்பதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

இதை ஏற்காத எதிர்க்கட்சியினர் உடனடியாக விவாதம் நடத்தக் கோரி அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. இதேபோல் மாநிலங்களவை பிற்பகலில் கூடியபோது, அமளி ஏற்பட்டதால் முதலில் 3 மணி வரைக்கும் பின்னர் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments