மீண்டும் சீற்றம் அடைந்த மவுன்ட் மெரபி எரிமலை
இந்தோனேசியாவிலுள்ள மவுன்ட் மெரபி (Mount Merapi ) எரிமலை மீண்டும் சீற்றமடைந்து, 6,000 மீட்டர் உயரத்துக்கு (6,000-meter-high ash column) சாம்பலை வீசியெறிந்து வருகிறது.
மவுன்ட் மெரபி எரிமலை கடந்த மாதம் 13ம் தேதி கடைசியாக வெடித்து சிதறியது. இதையடுத்து இன்று காலை முதல் மீண்டும் சீற்றமடைந்து, அதிலிருந்து 6,000 மீட்டர் உயரத்துக்கு சாம்பலும், கற்களும் வீசப்பட்டு வருகிறது. எரிமலை சீற்றத்தைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக மத்திய ஜாவாவிலுள்ள சுரகார்தா விமான நிலையத்தை (Surakarta airport) இந்தோனேசிய அரசு தற்காலிகமாக மூடியுள்ளது. முன்னதாக, 2010ம் ஆண்டு மவுன்ட் மெரபி எரிமலை வெடித்து சிதறியதில் 300 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments