நடிகை அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் என தகவல்

0 2748

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான அனுஷ்காவுக்கு, ஏற்கனவே விவாகரத்தான தெலுங்கு இயக்குனருடன் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த அனுஷ்கா, பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். அவருக்கும் பாகுபலி நடிகர் பிரபாசுக்கும் காதல் என வெளியான செய்திகளை இருவருமே மறுத்தனர்.

அவ்வப்போது தனது திருமணம் குறித்து வெளியாகும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம், திருமண பொறுப்பை பெற்றோரிடமே விட்டு விட்டதாக அனுஷ்கா தெரிவித்திருந்தார். இந்நிலையில் தெலுங்கு இயக்குனர் பிரகாஷ் கோவலமுடிக்கும், அனுஷ்காவுக்கும் விரைவில் திருமணம் என தற்போது புதிய தகவல் பரவி வருகிறது. அனுஷ்கா நடித்த இஞ்சி இடுப்பழகி படத்தை இயக்கிய பிரகாஷ் கோவலமுடி, ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments