எம்.எல்.ஏ க்களை கடத்த போவதாக மொட்டை கடிதம்

0 1845

என்.பி.ஆர், என்.ஆர்.சி ஆகியவற்றை நடைமுறைப்படுத்தினால், எம்.எல்.ஏக்கள் அனைவரையும் கடத்த போவதாக வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளருக்கு அனுப்புனர் முகவரி இல்லாமல் வந்த  கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் அல் ஹக் என்ற பெயரில் தாங்கள் 250 பேர் ஒரு இயக்கமாகசெயல்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்த கூடாது என்றும், அவ்வாறு ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தினால் தங்கள் இயக்கத்தில் உள்ள 250 பேரும் சேர்ந்து தமிழகத்தின் அனைத்து எம்.எல்.ஏக்களையும் கடத்தப் போவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து, கடிதம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments