தளவாட உற்பத்தித் தொழிற்சாலைகள்: தமிழகத்தில் 5 இடங்கள் தேர்வு

0 1379

தமிழகத்தில் பாதுகாப்புத் துறைத் தளவாட உற்பத்தித் தொழிற்சாலைகள் அமைப்பதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும், உத்தரப்பிரதேசத்திலும் பாதுகாப்புத்துறைத் தளவாட உற்பத்தித் தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என 2018 - 2019 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் சென்னை, கோவை, ஓசூர், சேலம், திருச்சி ஆகிய இடங்கள் தொழிற்சாலைகள் அமைப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.

படைக்கலத் தொழிற்சாலை வாரியமும், தனியார் துறையினரும் மூவாயிரத்து நூறு கோடி ரூபாயை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளன. இதுவரை 6 முறை ஆலோசனைக் கூட்டங்கள் நடத்திய நிலையில், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒரு நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர் வில்சனின் கேள்விக்குப் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் எழுத்து மூலம் அளித்த பதிலில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments