டெல்லி கலவர சேதங்கள் குறித்து இடைக்கால அறிக்கையில் தகவல்
டெல்லி கலவரத்தில் 122 வீடுகள், 322 கடைகள், 301 வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன அல்லது முழுமையாக சேதமடைந்துள்ளன என இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி தீயணைப்புத் துறை கடந்த வாரம் தாக்கல் செய்த இடைக்கால அறிக்கையில், 79 வீடுகள், 52 கடைகள், 5 குடோன்கள், 4 மசூதிகள், மூன்று தொழிற்சாலைகள், 2 பள்ளிக்கூடங்கள் எரிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வடகிழக்கு டெல்லியில் கலவரம் பாதித்த பகுதிகளில், முதலமைச்சர் கெஜ்ரிவால் உத்தரவுப்படி 18 குழுக்கள் அமைக்கப்பட்டு, சேத மதிப்பீடுகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
தலா 60 பேர் கொண்ட இந்த குழு கணக்கெடுப்பை தொடர்ந்து நடத்தி வருவதோடு நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறது. இந்த பணிகள் முடிந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகே, டெல்லி கலவரத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து முழுமையான மதிப்பீடுகள் வெளியாகும்.
Comments