நைஜீரியாவில் ஆயுதமேந்திய கும்பல் நடத்திய கொடூர தாக்குதல்

0 1125

நைஜிரீயாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆயுதமேந்திய கும்பல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 50 பேர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நாட்டில் கதுனா (kaduna) மாநிலத்திலுள்ள 5 கிராமங்களில் புகுந்த ஆயுதமேந்திய கும்பல், அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடித்ததோடு, அங்குள்ள மக்களையும் சுட்டு வீழ்த்திவிட்டு, வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்துவிட்டு சென்றது.

இந்நிலையில் தாக்குதல் நடைபெற்ற இடங்களை அம்மாநில ஆளுநர் நசீர் எல் ரூபேய் (Nasiru El-rufai) நேரில் சென்று பார்வையிட்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், குறைந்தது 50 பேர் இத்தாக்குதலில் உயிரிழந்திருக்கூடும் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments