முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் கைக்குழந்தையுடன் பெண் காவலர்
உத்தரப்பிரதேச முதலமைச்சர் பாதுகாப்பு பணியில் பெண் காவலர் ஒருவர் தனது ஒன்றரை வயது கைக்குழந்தையுடன் ஈடுபட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கவுதம்புத்தர் நகர் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார். நொய்டாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அவர் சென்ற போது ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அவர்களில் பெண் காவலர் பிரீத்தி ராணி என்பவர் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். தாய்மைக்கும், கடமைக்கும் சரிசம இடம் கொடுத்த இந்த பெண் காவலரின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
Comments