கொரோனா பாதிப்புடையவர் பயணம் செய்த விமானத்தின் ஊழியர் குழுவினரை தனிமைப்படுத்த 'ஏர் இந்தியா' நடவடிக்கை

0 3132

கொரோனா வைரஸ் பாதிப்புடையவர் பயணம் செய்த விமானத்தின் ஊழியர் குழுவினரை தனிமைப் பரிசோதனைக்கு உட்படுத்த ஏர் இந்தியா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த மாதம் 25-ஆம் தேதி ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த ஒருவருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் தற்போது கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வரும் இத்தாலிக்கு சென்றதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அந்த விமானத்தின் பணிக்குழுவினருக்கு நிறுவனம் அனுப்பியுள்ள உத்தரவில் கொரோனா பாதிக்கப்பட்டவர் பயணம் செய்ததால் தொற்று பரவலுக்கான வாய்ப்புகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பணிக்குழுவினர் 14 நாட்களுக்கு தங்கள் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும், பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டால் சுகாதாரத் துறையினரை அணுகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 14 நாட்களுக்குப் பின் சுகாதாரத் துறையினரின் ஒப்புதலைப் பெற்று பணிக்கு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments