அழிந்துவரும் இனமான காண்டாமிருகத்தை காக்க வனத்துறையினர் தீவிரம்
அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் இருந்த 2 பெண் காண்டாமிருகங்களை பிடித்த வனத்துறையினர், அவைகளை மானஸ் தேசிய பூங்காவில் விட்டுள்ளனர்.
அழிந்து வரும் பட்டியலில் இடம்பெற்றுள்ள காண்டாமிருகங்கள் கிழக்கு இந்தியா மற்றும் அண்டை நாடான நேபாளத்திலும் அதிகளவில் உள்ளன. உலகின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருந்துவரும் காசிரங்கா தேசிய பூங்காவிலும் சுமார் ஆயிரத்து 800 காண்டாமிருகங்கள் வாழ்ந்து வருகின்றன.
மருத்துவ குணம் வாய்ந்த காண்டாமிருகத்தின் கொம்புகளுக்காக அவைகள் வேட்டையாடப்பட்டு, சர்வதேச சந்தையில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதை தடுக்கவும், அவைகளை பாதுகாக்கும் நோக்கில் 2 காண்டாமிருகங்களையும் பிடித்து, மனாஸ் தேசிய பூங்காவில் விட்டதாகவும், இதனால், அதன் எண்ணிக்கை 43ஆக உயர்ந்துள்ளதாகவும் அம்மாநில வனத்துறை அமைச்சர் பரிமல் சுக்லபதையா தெரிவித்துள்ளார்.
Comments