கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரத்தில் படைகளை குவித்துள்ள சிரியா அரசு

0 815

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சாராக்யூப் (SARAQEB) எனும் நகரில் அரசு தனது படைகளைக் குவித்துள்ளது.

அதிபர் பஷர் அல் அசாத்தின் அரசு படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2011 ஆண்டு முதல் உள்நோட்டு போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் ஆதரவுடன் அரசுப்படை கிளர்ச்சியாளர்களின் கட்டுபாட்டில் உள்ள நகரங்களை ஓவ்வொன்றாக மீட்டு வருகிறது.

அதே சமயம் கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி ஆயுதங்களையும், படைகளையும் அளித்து வருகிறது. சிரியாவின் வடமேற்கு பகுதியிலுள்ள சாராக்யூப் நகரம் கிளர்ச்சியாளர்களின் கட்டுபாட்டில் உள்ளது.

இந்நகரமானது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ நகரத்திற்கும், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் நகரத்திற்கும் நுழைவாயிலாக உள்ளதால் அதனை மீட்க சிரியா அரசு தற்போது தனது படைகளை குவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments