ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தடை கோரிய மனு தள்ளுபடி

0 1118

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் அனுமதி இன்றியும் பொதுமக்கள் கருத்து கேட்காமலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள், மனுதாரர் முதலில் உயர்நீதிமன்றத்தை  அணுகி இருக்கவேண்டும் என்று கூறினார்கள்.

அதற்கு பதிலளித்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில் இந்திய அளவில் இந்த அரசாணை மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும், அதனால் இந்த வழக்கை உச்சநீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.

இதைத்தொடர்ந்து மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதிகள், முதலில் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments