வருகிற 15-ந்தேதி முதல் வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி - பியூஸ் கோயல்

0 1052

வருகிற 15-ந்தேதி முதல் வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

வெங்காயம் விலை அதிகரித்து வந்ததை தொடர்ந்து, அதன் ஏற்றுமதிக்கு கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு தடை விதித்தது. ஆனால், தற்போது விளைச்சல் அதிகரித்ததால், வெங்காயத்தின் விலை குறைந்து வருகிறது.

இந்நிலையில் விலை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 15-ந்தேதி முதல் வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படும் என்று பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். இது விவசாயிகளின் வருவாயை பெருக்க உதவும் என்றும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments