காதல் மன்னனை.. கஞ்சி காய்ச்சிய போலீஸ்..! டிக்டாக் பிளாக் மெயிலர் கைது

0 6759

டிக்டாக்கில் காதல் மன்னன் என்ற பெயரை வைத்துக் கொண்டு, பள்ளி மாணவிகள் முதல் பல்லு போன கிழவிகள் வரை மயக்கி வீடியோ எடுத்து லட்சகணக்கில் பணம் பறித்து வந்த 22 வயது விபரீத இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வாயெல்லாம் பற்களுடன் நடன சூறாவளி போல ஆட்டம் போடும் இந்த பேய்குழந்தை தான் டிக்டாக் பிளாக்மெயிலர் என்று காவல்துறையினரால் அன்போடு அழைக்கப்படும் காதல் மன்னன் கண்ணன்..!

டிக்டாக்கில் சிங்கிளாக சிரித்தபடி ஆட்டம் போட்ட வரை சிக்கலின்றி உலாவந்த இந்த காதல் மன்னன், தன்னுடைய சிரிப்பில் மயங்கிய பெண்களுடன் காதல் பாட்டுக்கு டூயட் போட்டு களவானித்தனத்தை தொடங்கியதாக கூறப்படுகின்றது

சின்ன பயல் தானெ...? என எண்ணி இவனுடன் டிக்டாக்கில் டூயட் போட்ட பாவத்துக்கு இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவர் வீதிக்கு வந்துள்ளார்

டிக்டாக்கில் தன்னை 10 சிம்பு, 15 பிரசாந்த், 25 ஜெமினி கணேசன் என கருதிக் கொண்டு இந்த விஷக்குழந்தை செய்த விஷம காதல் சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகரித்தது 

மீசைக்கூட முளைக்காத இந்த கண்ணனுக்கு விதவிதமான ஆசைகள் முளைத்ததால் டிக்டாக்கில் அடிமைகளாக கிடக்கின்ற சில பள்ளி செல்லும் மாணவிகள் மட்டுமல்ல திருமணமான பெண்கள், திருநங்கைகள் என பலர் இவனது காதல் வலையில் சிக்கியதாக கூறப்படுகின்றது.

டிக்டாக்கில் பவுடரை அப்பிக் கொண்டு, பவுசாக வலம் வரும் பல்லு போன சில மூதாட்டிகளை கூட விட்டு வைக்காமல் காதல் டூயட் போட்டது தான், இவன் செய்த திருவிளையாடல்களின் உச்சமாக பார்க்கப்படுகின்றது. 

ஒரு கட்டத்தில் இவனது வீடியோக்களை பார்த்து காதல் வார்த்தையில் மயங்கிய பெண்கள் கமெண்டில் இவனை பார்க்க துடிக்க, அவர்களிடம் செல்போன் நம்பரை பெற்று தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அவர்களுடன் தனிமையில் இருப்பதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு பொள்ளாச்சி பாய்ஸ் பாணியில் மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாக்கி உள்ளான்.

அந்த வகையில் 50க்கும் மேற்பட்ட பெண்களை வீடியோவாக பதிந்து வைத்துக் கொண்டு பணம் பறித்து வந்துள்ளான். நாளுக்கு நாள் இவனுக்கு ரசிகைகள் எண்ணிக்கை கூட மறுபக்கம் இவனால் பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்துள்ளது.

குறிப்பாக திருமணமான பெண் ஒருவர் இவனது பிளாக் மெயிலுக்கு பயந்து கணவனுக்கு தெரியாமல் 2 லட்சம் ரூபாய் வரை பறிகொடுத்துள்ளார். அதன் பிறகும் விடாமல் அந்த பெண்ணை பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளான் இந்த சுள்ளான்..!

பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி ஒருவர் மற்றும் பணத்தை இழந்த திருமணமான பெண் உள்ளிட்டோர் தென்காசி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க, பொறியில் சிக்கிய எலியாக வசமாக சிக்கிக் கொண்டான் களவானி தனம் செய்த கண்ணன் என்கின்றனர் காவல்துறையினர்.

டிக்டாக்கில் காதலுக்காக அலையும் பெண்களை குறிவைத்தே தனது வலையில் வீழ்த்தியதாக வாக்குமூலம் அளித்துள்ள கண்ணனுக்கு டிக்டாக்கில் முன்னோடி ஜி.பி.முத்துவாம்..!

மூன்று தினங்களுக்கு முன்பு திருச்செந்தூர் கடற்கரையில் நின்று முனிமாவை கூவி அழைத்த இந்த காதல் பறவைக்கு போலீசார் சிறப்பாக கஞ்சிகாய்ச்சியதால் சிறகொடிந்த நிலையில் சிறைப்பறவையாகி ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறது ..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments