ஹாங்காங் மெட்ரோவை பின்னுக்கு தள்ளிய ஹைதராபாத் மெட்ரோ ரயில் சேவை...
மிகக் குறைந்த மனித சக்தியை கொண்டு இயங்குவதில் ஹாங்காங் மெட்ரோ சேவையை பின்னுக்கு தள்ளியுள்ளது ஹைதராபாத் மெட்ரோ ரயில் சேவை.
டெல்லி மெட்ரோவுக்குப் பிறகு நாட்டின் இரண்டாவது பெரிய மெட்ரோ நிலையமாக விளங்கும் ஹைதராபாத் மெட்ரோ ரயில், தற்போது மிக குறைந்த மனிதசக்தியை கொண்டு இயங்குவதில் உலகளவில் ஒரு அடையாளத்தை பெற்றுள்ளது.
இது குறித்து தகவல் தெரிவித்துள்ள ஹைதராபாத் மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் என்.வி.எஸ் ரெட்டி, மிகக் குறைந்த மனித சக்தியை கொண்டு சிறப்பாக இயங்க கூடிய மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் ஹாங்காங் மெட்ரோவை வீழ்த்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஹாங்காங் மெட்ரோ சேவை ஒரு கிலோமீட்டருக்கு 25 பணியாளர்களைக் கொண்டுள்ளது. அதுவே ஹைதராபாத் மெட்ரோவில் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 18 பணியாளர்கள் மட்டுமே பணியாற்றி சிறப்பான சேவையை வழங்கி வருவதாக ரெட்டி குறிப்பிட்டுள்ளார். இந்த சாதனை ஹைதராபாத் மெட்ரோவின் செயல்திறனை குறிப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். பயணிகளின் வசதிக்காக விரைவில் கூடுதல் சேவைகள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Comments