தமிழகத்தில் 2 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பு

0 5358

தமிழகத்தில் 2 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி கடந்த 27 ஆம் தேதியும், குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன், கடந்த 28ஆம் தேதியும் உடல்நலக்குறைவால் காலமாகினர்.

இந்த 2 தொகுதிகளும் காலியாக இருப்பதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவுக்கு சட்டமன்ற செயலாளர் தெரிவித்தார்.

இதையடுத்து தேர்தல் ஆணையத்துக்கு சத்யபிரதா சாஹூ எழுதியுள்ள கடிதத்தில், திருவெற்றியூர், குடியாத்தம் ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆணைய விதிப்படி, சட்டமன்ற உறுப்பினர் மறைந்த பின்னர் அந்த தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments