கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் நூதன போராட்டம்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கையகப்படுத்தப்பட்ட தங்கள் நிலங்களுக்கு உரிய தொகையை வழங்கக் கோரி விவசாயிகள், கழுத்தளவு ஆழக் குழிக்குள் அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜெய்ப்பூர் மேம்பாட்டு அமைப்பு சார்பில் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் வீடுகளை கட்டுத் தருவதற்காக, கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, 60 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதனை வாங்க மறுத்த விவசாயிகள் தற்போதைய சந்தை விலைக்கு ஈடான தொகையை இழப்பீடாக வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜமீன் சமாதி சத்யாகிரகம் எனும் இந்த போராட்டத்தில் ஞாயிறன்று 5 பெண்கள் உட்பட 21 விவசாயிகள் கழுத்தளவு ஆழ குழியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், 2வது நாளில் 51 விவசாயில் குழியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments