வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு
நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த பிப்ரவரியில் 7.78 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த ஜனவரியில் 7.16 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம், 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மந்தமாக உள்ளது.
கொரானா வைரஸ் பரவலால் உலக அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மேலும் மந்த நிலைக்கு இட்டுச் செல்லக் கூடும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.97 சதவீதத்தில் இருந்து, கடந்த பிப்ரவரியில் 7.37 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதேபோல, நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 9.70 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.
Comments