காட்டுத்தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்களுக்கு உதவும் புதிய சாதனம்
ஸ்பெயின் நாட்டில் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபடும் தீயணைப்பு வீரர்களுக்கு உதவும் வகையில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் இயங்கும் புதிய சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிராமிட்டியோ எனும் தொடக்க நிலை நிறுவனம் வடிவமைத்துள்ள கையடக்க அளவிலான இந்த சாதனம், தீயணைப்பு வீரர்களின் உடைகளின் மேல் பொருத்தப்படுகிறது.
அந்த சாதனத்துடன் காட்டுத் தீயை அணைக்கும் போது, அதில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள், அந்த இடத்தில் தீ எரியும்அளவு, புகையின் அடர்த்தி, ஈரப்பதம் போன்றவற்றை நுண்ணுனர்ந்து, கண்காணிப்பு திரைக்கு எச்சரிக்கைகளை அனுப்புகிறது.
இதனால் வீரரை சுற்றி சூழ்நிலை மோசமடையும் போது அவரை மீட்க முடியும். இந்த சாதனங்களை அணிந்த வீரர்கள், தீயை அணைக்கும் சோதனையும் நடத்தப்பட்டது.
Comments