ஒற்றை தந்தத்துடன் ஆக்ரோஷத்துடன் சுற்றித்திரியும் ஒற்றையானை

0 1108

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியில் ஒற்றை தந்தத்துடன் கூடிய  ஒற்றையானை ஆவேசமாக சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திம்பம் வன சோதனைச்சாவடி முதல் தலமலை வரை உள்ள 23 கிலோமீட்டர் தூர வனச்சாலையில் யானை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடுவது வழக்கம். தற்போது ராமரணை பேருந்து நிறுத்தம் அருகே ஒற்றை தந்தத்துடன் கூடிய  ஒற்றைக்கொம்பன் யானை ஆக்ரோஷமாக சுற்றித்திரிகிறது.

பகல் நேரங்களில் சாலையோர வனப்பகுதியில் நின்றபடி தும்பிக்கையால் மண்ணை வாரி தனது தலை மீதே தூற்றியபடி வெகுநேரம் நிற்கிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments