இந்தியா-மலேசியா இடையேயான வர்த்தக உறவுகள் விரைவில் சீரடைய வாய்ப்பு

0 2608

காஷ்மீர் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான மலேசிய முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மதுவின் விமர்சனத்தால் முடங்கியுள்ள இந்திய-மலேசிய வர்த்தக உறவுகள் விரைவில்  சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசிய பாமாயிலின் மிகப் பெரிய இறக்குமதியாளராக இந்தியா இருந்தது. மகாதிர் முகம்மதுவின் தேவையற்ற  கருத்துகளை அடுத்து கடந்த ஜனவரி முதல் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில் மலேசியாவின் புதிய பிரதமராக முஹியித்தீன் யாசின் பதவி ஏற்றுள்ளார். அவரது அமைச்சரவையில் பதவி கிடைக்க வாய்ப்புள்ள வீ கா சியோங் (Wee Ka Siong) என்ற எம்.பி. இந்தியாவுடனான பாமாயில் ஏற்றுமதி பிரச்சனைக்கு தீர்வு காண புதிய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்திருக்கிறார்.

இதை உறுதி செய்யும் வகையில் மலேசியாவின் புதிய பிரதமர் முஹியித்தீன் யாசின் இந்த ஆண்டு இந்தியாவுக்கு பயணம் செய்வார் என்றும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments