இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட மீனவர் குடும்பத்தினருக்கான மறுவாழ்வு குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

0 919

இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் மீனவர்கள் மறுவாழ்வுக்காக தமிழக அரசுக்கு 300 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட மீனவர் மறுவாழ்வு திட்டங்களை அமல்படுத்த உயர்நீதிமன்றம் 2017-ல் உத்தரவிட்டதை மனுதாரர் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து, மத்திய அரசு நிதியின் கீழ் மீனவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண உதவிகள் குறித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்கில் மீன்வளத்துறை எந்த பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை என அதிருப்தி தெரிவித்தனர். மீன்வளத்துறை இயக்குநர் மார்ச் 16ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments