சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை

0 1081

சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில், பார்மலின் ரசாயனம் பூசப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா என  உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

கடந்த இரு நாட்களுக்கு முன்பு மதுரை கரிமேடு சந்தையில் பார்மலின் ரசாயனம் பூசப்பட்ட மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள மீன் சந்தைகளில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில் சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டிலும் 10க்கும் மேற்பட்ட கடைகள், மீன் ஏற்றுமதி  நிறுவனங்களிலும் இன்று அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அதில் மீன், இறால் உள்ளிட்டவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவற்றில் பார்மலின் பூசப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால், உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments