டெல்லியில் நேற்றும் சில பகுதிகளில் வன்முறை என தகவல் பரவியதால் அச்சம்

0 650

டெல்லியில் நேற்றும் சில பகுதிகளில் வன்முறை வெடித்ததாக பரவிய தகவலால், மேற்கு டெல்லியில் இருந்து மட்டும் 5 மணி நேரத்தில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 481 அவசர அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

டெல்லி போலீசார் உள்துறை அமைச்சகத்திடம் அளித்த அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி கலவரத்தில் தற்போதுவரை 46 பேர் பலியாகியுள்ள நிலையில், தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பின் நிலைமை கட்டுக்குள் உள்ளது.

ஆனால் மீண்டும் வன்முறை நிகழலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை வன்முறை நிகழ்ந்ததாக தகவல் பரவியதை அடுத்து, அச்சத்தில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் அழைப்புகளை மேற்கொண்டுள்ளனர்.

அவை அனைத்தும் அச்சத்தில் மேற்கொள்ளப்பட்டவை என்றும், உண்மையில் எங்கும் வன்முறை நிகழவில்லை என்றும் மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments