பண மோசடி வழக்கில் அகில இந்திய இந்து மகாசபா தலைவர் ஸ்ரீகண்டன் கைது

0 3262

பாலியல் புகாரில் தலைமறைவாக இருந்து வந்த, அகில இந்திய இந்து மகாசபா தலைவர் ஸ்ரீகண்டன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக வளைதளங்களில் ஸ்ரீகண்டன் தன்னை இழிவுப்படுத்தி வருவதாகவும், பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் தவறான கருத்துக்களை பரப்பி வருவதாகவும்  வளசரவாக்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்.

5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த ஸ்ரீ கண்டனை  தேடிவந்த நிலையில் அவர் முன்ஜாமீன் பெற்றார். இதனிடையே, ஸ்ரீகண்டன், தன்னிடம் பணமோசடி செய்திருப்பதாக விமல் சந்த் என்பவர் புகார் அளித்திருந்தார்.

இதை விசாரித்த போலீசார் கோடம்பாக்கம் ஸ்ரீ எனும் ஸ்ரீகண்டன் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

தலைமறைவாக இருந்த கோடம்பாக்கம் ஸ்ரீ கண்டனை தனிப்படை போலீசார் நேற்று நள்ளிரவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments