தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் மார்ச் 9 முதல் ஏப்ரல் 9 வரை நடைபெறும்

0 1244

தமிழகச் சட்டப்பேரவையின் கூட்டத் தொடர் மார்ச் 9 முதல் ஏப்ரல் 9 வரை மொத்தம் 23 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.

தமிழகச் சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் தனபால், கூட்டத்தொடரின் முதல் நாள், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

மார்ச் 11 ஆம் தேதி வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதமும், 12 ஆம் தேதி பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை மீதான விவாதமும் நடைபெற உள்ளதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments