துருக்கி படையால் சிரியா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதா?
துருக்கி படையால் தங்கள் நாட்டு விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதாக வெளியான செய்தியை சிரியா மறுத்துள்ளது.
சிரியா அரசு படைக்கும், துருக்கி படைக்கும் கடந்த சில நாள்களாக மறைமுக மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இட்லிப்பில் சிரியா அரசு விமானத்தை துருக்கி படையினர் சுட்டுவீழ்த்தியதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.
இதை சிரியா அரசு ஊடகம் மறுத்துள்ளது. அதேநேரத்தில் இட்லிப் பிராந்தியம் சரகேப்பில் (Saraqeb) துருக்கியின் ஆளில்லா விமானத்தை சிரியா அரசு படையினர் சுட்டு வீழ்த்தி விட்டதாகவும் சிரியா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இதை துருக்கி நாடு உறுதி செய்யவோ அல்லது மறுக்கவோ இல்லை.
Comments