கிரீஸ் நாட்டை நோக்கி பயணம் மேற்கொள்ளும் 100 கணக்கான அகதிகள்

0 982

ஆப்கான் மற்றும் பல்வேறு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வெளியேறிய நூற்றுக்கணக்கான அகதிகள் துருக்கி வழியாக நடந்தே கிரீஸ் நாட்டிற்குள் செல்ல முயற்சித்து வருகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒன்றான க்ரீஸ், தங்களது நாட்டிற்குள் சட்டவிரோதமாக வருபவர்களை தடுத்து நிறுத்துவதற்காக எல்லைப்பகுதியில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இருப்பினும் கிரீஸ் செல்வதற்கு தங்களது நாட்டின் பாதையை பயன்படுத்துவதற்கு அதன் அண்டை நாடான துருக்கி எந்தவித ஆட்சேபமும் தெரிவிக்காததால், நூற்றுக்கணக்கான அகதிகள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர். துருக்கி எல்லைப்பகுதியில் தங்குவதற்கு இடமில்லாமல், சாலையோரத்திலே படுத்து தூங்கிக்கொண்டு அவர்கள் பயணம் மேற்கொள்ளும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments