நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர்: நேரடி வரிகள், கருக்கலைப்பு குறித்துப் புதிய மசோதாக்கள் அறிமுகம்
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வின் முதல் நாளான இன்று மூன்று புதிய மசோதாக்களை அரசு கொண்டுவர உள்ளது.
நேரடி வரிகள் விவாதத்தில் இருந்து விசுவாசத்துக்கு என்கிற சட்ட மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் அறிமுகம் செய்கிறார். மருத்துவ முறையிலான கருக்கலைப்புத் திருத்த மசோதாவை நலவாழ்வுத்துறை அமைச்சர் ஹர்சவர்த்தன் மக்களவையில் தாக்கல் செய்கிறார்.
மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்கள் மசோதாவை மாநிலங்களவையில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தாக்கல் செய்கிறார்.
டெல்லி வன்முறை தொடர்பாக காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக, இடதுசாரிக் கட்சிகள் ஆகியவை ஒத்திவைப்புத் தீர்மானத்துக்கான அறிவிப்பைக் கொடுத்துள்ள நிலையில், அவை சுமூகமாக நடைபெற்றால் புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெறும்.
Comments