ஐரோப்பிய நாடான ஆர்மீனியாவுக்கு இந்திய ரேடார்கள் ஏற்றுமதி
ஐரோப்பிய நாடான ஆர்மீனியாவுக்கு 288 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களைக் கண்டறியும் ரேடார்களை வழங்கும் ஒப்பந்தத்தை இந்தியா பெற்றுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அரசு அதிகாரி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ. மூலம் "ஸ்வாதி" எனப்படும் ஆயுதங்களைக் கண்டறியும் ரேடார்களை விற்பனை செய்யும் ஒப்பந்தத்தை இந்தியா பெற்றுள்ளதாகக் கூறினார்.
4 ரேடார்களை வழங்கும் இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 288 கோடியே 70 லட்சம் ரூபாய் என்று கூறிய அவர், ரேடாரை வழங்கும் ஒப்பந்தப் போட்டியில் ரஷ்யா, போலந்து உள்ளிட்ட நாடுகள் இருந்தும், அவற்றைச் சமாளித்து இந்தியா இதனைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.
தற்போது ஏற்றுமதி செய்யப்பட உள்ள இதுபோன்ற ரேடார்களைத்தான் காஷ்மீரில் இந்தியா பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Comments