காஷ்மீரில் ஒரே நாளில் 5 தீவிரவாதிகள் கைது
காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் நேற்று ஒரே நாளில் 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புட்காம் என்ற இடத்தில் சில தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் புட்காம் பகுதி காவல்துறையினர் மற்றும் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படையினருடன் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு மறைந்திருந்த அன்ஸாருல் கஸ்வத்துல் ஹிந்த் என்ற அமைப்பைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து சில ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதேபோல் கந்தர்பால் என்ற இடத்தில் பதுங்கியிருந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயாஸ் அகமது என்பவர் சிக்கியுள்ளார். இவர் மீது கங்கன் காவல் நிலையத்தில் கடந்த 2008ம் ஆண்டு வெடிகுண்டு வீசியதாக வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments