சிரியா- துருக்கி படைகளுக்கு இடையே கடும் மோதல்
தங்கள் நாட்டு உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடியாக சிரியாவின் இரு போர் விமானங்கள் மற்றும் 100 டேங்குகளையும் குண்டு வீசி துருக்கி அழித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை துருக்கியின் ஹடாய் மாகாணத்தில் சிரியாவின் இட்லிப் நகரை ஒட்டிய எல்லைப் பகுதியில் நடந்த ஏவுகணைத் தாக்குதலில் 34 துருக்கி வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை துருக்கி படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 26 சிரிய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் துருக்கி வெளியிட்டுள்ள வீடியோவில் சிரியாவின் 2 போர் விமானங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த டேங்குகளையும் குண்டு வீசி தாக்கியுள்ளது.
தங்கள் நாட்டு உளவு விமானத்தை சிரியா சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக துருக்கி பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹலுஸி அகர் தெரிவித்துள்ளார்.
Comments