வைரலான மீம்ஸ்களுக்கு இவான்கா டிரம்ப் வரவேற்பு

0 12991

தனது புகைப்படங்களை வைத்து வெளியான மீம்ஸ்களை வரவேற்பதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா தெரிவித்துள்ளார்.

image

சமீபத்தில் இந்தியா வந்திருந்த இவான்கா தாஜ்மகாலை சுற்றி பார்த்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக, நெட்டிசன்கள் அவற்றை மீம்ஸ்களாக மாற்ற தொடங்கினர்.

image

இவான்காவை சைக்கிளில் அழைத்து செல்வது, அவருடன் சேர்ந்து நிற்பது போன்ற மீம்ஸ்கள் இணையத்தில் பகிரப்பட்டன. இதனிடையே, ஹிந்தி பாடகர் தில்ஜித் டோசன்ஜ்ம், இவான்காவுடன் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

இதற்கு இவான்கா, இந்திய மக்களின் அரவணைப்பை தான் பாராட்டுவதாகவும், என்றும் மறக்க முடியாத அனுபவம் எனவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments