370ஆவது சட்டப்பிரிவு ரத்து வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு

0 2659

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை, 7 நீதிபதிகள் கொண்ட விரிவான அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்த வழக்கை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு தற்போது விசாரித்து வருகிறது. ஆனால் 7 நீதிபதிகள் கொண்ட இன்னும் விரிவான அமர்வுக்கு வழக்கை மாற்ற வேண்டும் என மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் கடந்த ஜனவரி 23ஆம் தேதி ஒத்திவைத்தது. இந்நிலையில்,  370ஆவது பிரிவு ரத்துக்கு எதிரான வழக்கை, 7 நீதிபதிகள் கொண்ட விரிவான அமர்வுக்கு மாற்ற அவசியம் ஏதும் இல்லை என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வே வழக்கினை தொடர்ந்து விசாரிக்க உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments