இரண்டாவது டெஸ்டிலும் இந்தியாவை வென்ற நியூசிலாந்து

0 1539

இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும், நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

இரண்டாவது நாளான நேற்று ஆட்டநேர முடிவில் இந்திய அணி, 6 விக்கெட் இழப்புக்கு 90 ரன்களை எடுத்திருந்தது. விஹாரியும், ரிசப் பந்தும் களத்தில் இருந்தனர். இதைதொடர்ந்து இன்றைய ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, கூடுதலாக 34 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இந்திய தரப்பில் பிரித்வி ஷா, புஜாரா, கோலி மற்றும் ஜடேஜாவை தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கில் வெளியேறினர். நியூசிலாந்து தரப்பில் போல்ட் 4 விக்கெட்டுக்களையும், சவூதி 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். இதையடுத்து 132 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 46 ரன்களை எடுத்திருந்தது.

பின்னர் தெடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி, 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்ற நியூசிலாந்து அணி, டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments