பறக்கும் விமானத்தில் வைஃபை பயன்படுத்த புதிய விதிமுறைகள்

0 1655

விமானங்களில் வைஃபை பயன்படுத்த மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

விமானங்கள் பறக்கும் போது இணையத்தை பயன்படுத்து குறித்து பல்வேறு கோரிக்கைகள் மத்திய அரசுக்கு வந்தன. இதையடுத்து இதனைப் பரிசீலித்த மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளையும், சட்டதிட்டங்களையும் வகுத்துள்ளது.

அதன்படி விமானத்தில் பயணிக்கும் பயணிகள் தாங்கள் பயன்படுத்தும் லேப்டாப், ஸ்மார்ட் போன், டேப்லட், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஈ ரீடர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் வைபையைப் பயன்படுத்த குறிப்பிட்ட விமானத்தை இயக்கும் விமான ஓட்டியிடம் அனுமதி பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக திருத்தப்பட்ட விமான விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த விதிகள் ஏற்கனவே கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட வரைவு விதிகளில் இருந்தாலும் பொதுமக்களிடம் இருந்து இது தொடர்பாக எந்த பரிந்துரைகளோ, ஆட்சேபனைகளோ வரவில்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments