இந்தியன் - 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தொடர்பாக கமல்ஹாசனுக்கு போலீசார் சம்மன்
3 பேர் உயிரை பறித்த இந்தியன் - 2 படப்பிடிப்பு விபத்து குறித்து, வருகிற 3 -ம் தேதி நேரில் ஆஜராகி, விளக்கம் அளிக்கக்கோரி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
கடந்த 19- ம் தேதி, சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் - ஈ.வி. பி பிலிம் சிட்டியில் நிகழ்ந்த விபத்தில் ராட்சத கிரேன் சரிந்து, உதவி இயக்குநர் உள்பட 3 பேர் பலியானார்கள். இந்த விபத்து நிகழ்ந்த போது படப்பிடிப்பு தளத்தில் இருந்த கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் இயக்குநர் ஷங்கர் ஆகிய மூவரும் நூலிழையில் உயிர் தப்பியதாக தகவல் வெளியாகி இருந்தது.
திரையுலகை உலுக்கிய இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் மத்திய குற்றப்பிரிவு போலீசில், ஏற்கனவே, இயக்குநர் ஷங்கர் ஆஜராகி விளக்கம் அளித்திருந்த நிலையில், இப்போது, கமல்ஹாசனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த சம்மனை ஏற்று, கமல்ஹாசன் வருகிற 3 - ம் தேதி, நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments