கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

0 1727

கர்நாடகத்தின் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1500 கன அடியாக அதிகரித்துள்ளது. 

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்து கொண்டே வந்தது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டமும் படிப்படியாக சரிந்தது. ஞாயிறு காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 105 அடியாகவும், நீர்வரத்து 183 கன அடியாகவும் இருந்தது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு ஆண்டுக்கு 177 புள்ளி இரண்டு ஐந்து டிஎம்சி நீரைக் கர்நாடகம் வழங்க வேண்டும். இந்த நீரை ஒவ்வொரு மாதத்துக்கும் எவ்வளவு வழங்க வேண்டும் என்பதையும் வரையறுத்துள்ளது.

அதன்படி தமிழகத்திற்குப் பிப்ரவரி மாதத்திற்கு வழங்க வேண்டிய இரண்டரை டிஎம்சி தண்ணீரைக் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து கர்நாடகம் திறந்து விட்டுள்ளது.

இந்த நீர் தமிழகம் வந்தடைந்ததால் ஞாயிறு மாலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1500 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 750 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments