கெட்டுப் போன மீன்கள் பறிமுதல் எதிரொலி - மீன் சந்தைகளில் தொடர் ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு
தமிழகம் முழுதும் மீன் சந்தைகளில் தொடர் ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான செய்திக்குறிப்பில் கடந்த 28-ஆம் தேதி, மதுரை கரிமேடு மீன் மார்க்கெட்டில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் ஆய்வின் போது, வெளி மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மீன்கள் தரம் குறைந்ததாகவும் கெட்டுப்போன நிலையிலும் இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் மீன் மார்க்கெட்டுகளில் மீன் துறை அதிகாரிகள் ஆய்வு செய்யவும், தரம் குறைந்த மீன்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் மீன் துறை இயக்குநரால் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகளை தடுக்க உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மீன் துறை அதிகாரிகள் தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments