ராகவா லாரன்சின் திருநங்கைகளுக்கான இல்லம் கட்டித்தரும் திட்டத்திற்கு நடிகர் அக்சய்குமார் ஒன்றரை கோடி ரூபாய் நிதி உதவி

0 3178

நடிகர் ராகவா லாரன்சின் அறக்கட்டளை மூலம், திருநங்கைகளுக்கான இல்லம் கட்டித்தரும் திட்டத்திற்கு நடிகர் அக்சய்குமார் ஒன்றரை கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார்.

தனது அறக்கட்டளை மூலம் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செய்துவரும் நடிகர் ராகவா லாரன்ஸ், அதன் அடுத்தகட்டமாக திருநங்கைகளுக்கான இல்லம் கட்டித்தரும் திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், லாரன்ஸ் இயக்கும், லக்சுமி பாம்ப் எனும் படத்தில் நடித்துவரும் பாலிவுட் நடிகர் அக்சய் குமார், இத்திட்டத்திற்காக ஒன்றரை கோடி ரூபாய் நிதி அளித்துள்ளார். தமிழ்ப்படமான காஞ்சனாவின் இந்தி ரீமேக்காக உருவாகிவரும் லக்சுமி பாம் படத்தில் அக் ஷய்குமார் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments