தொழிலதிபர் மைக்கேல் ப்ளும்பெர்க்கின் உயரத்தை கிண்டலடித்த டிரம்ப்

0 865

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட ஆர்வம் காட்டி வரும் தொழிலதிபர் மைக்கேல் ப்ளும்பெர்க்கின் (Michael Bloomberg) உயரத்தை அதிபர் டிரம்ப் கிண்டலடித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கு இந்த ஆண்டில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்ந்தெடுக்க நடைபெறும் தேர்தலில் தொழிலதிபர் ப்ளும்பெர்க் போட்டியிட்டு வருகிறார்.

இந்நிலையில் மேரிலாந்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டிரம்ப், ப்ளும்பெர்க்கின் உருவத்தை கிண்டலடிக்கும் வகையில், தமது முன்புள்ள மைக்கை விட உயரம் குறைந்தவர் என கிண்டலடித்தார். ப்ளும்பெர்க்கை மினி மைக் (Mini Mike) எனவும் டிரம்ப் விமர்சித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments