மெக்சிகோ ஓபன் டென்னிஸ் - சாம்பியன் பட்டம் வென்றார், நடால்

0 843

மெக்சிகோ ஓபன் டென்னிஸ் போட்டியில் நட்சத்திர வீரர் ஸ்பெயினின் ரபேல் நடால், சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

அகாபுல்கோ என்ற நகரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் இளம் வீரர் டெய்லர் பிரிட்ஸ் , உலகின் இரண்டாம் நிலை வீரரான நடாலை எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் நடால் 6 க்கு 3, 6 க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் நடால் வெற்றி பெற்றார்.

மெக்சிகோ ஓபன் பட்டத்தை நடால் கைப்பற்றியிருப்பது இது மூன்றாவது முறையாகும். 15 ஆண்டுகளுக்கு முன்பு, முதன்முறையாக 2005-ல் பட்டம் வென்ற இவர், 2013ஆம் ஆண்டிலும், கோப்பையை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments